கள்ளருடன் கூட்டுச் சேர்ந்துள்ளனரா யாழ் பொலிசார்?? அதிரடி ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? (Video)

சைக்கிள் களவெடுத்த கள்ளருடன் யாழ்ப்பாணப் பொலிசார் கூட்டுச் சேர்ந்துள்ளார்களா என சந்தேகம் தோன்றுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். யாழ் பொஸ்போ பாடசாலைக்கு அருகில் இயங்கும் பொஸ்கோ முன் பள்ளியில் தனது பிள்ளையை ஏற்றுவதற்காக சென்ற குடும்பஸ்தர் தனது சைக்கிளை திருடர்களிடம் பறி கொடுத்துள்ளார். பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்த சைக்கிளை திருடர்கள் இலகுவாக திருடும் அந்தக் காட்சியே இங்கு காட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. யாழ்ப்பாணப் பொலிசாருக்கு இது தொடர்பாக முறையிட்டும் குறித்த திருடர்கள் வந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரங்களை இலக்கத்தகட்டு இலக்கத்துடன் தெரிவித்திருந்தும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகின்றது. திருடர்கள் பாவித்த குறித்த மோட்டர் சைக்களின் இலக்கத்துக்குரிய உரிமையாளர் Jeevanold regi rongadsan
NO 7/2 CENTRAL EAST ROAD GURUNAGAR
NP BHJ 5441 என பதிவுகளின் மூலம் தெரிந்துள்ளது.

பொதுமக்கள் திருடனைப் பற்றிய விபரங்களை எடுத்திருந்தும் பொலிசார் இன்னும் இதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன் என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். பல விடயங்களில் அதிரடி காட்டும் வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறான திருடர்களுக்கு பொலிசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது தொடர்பாக ஆராய்வரா?


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *