“முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் வீட்டுதிட்ட பயனாளிகளுக்கு நிதி வழங்குவதில் இழுபறி!”

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதியினை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாந்தை கிழக்கில் அதிகளவான மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினரால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் கடன்பட்டு வீட்டினை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்ற பின்னரே கட்டம் கட்டமாக பண விடுவிப்புக்கள் வழங்கப்படும் என பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வீட்டினை அரைவாசிக்கு கட்டி எழுப்பியுள்ளதுடன் அதற்கான பணம் வழங்வதில் பிரதேச சபை இழுத்தடிப்பு செய்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது,

கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்திற்கான ஏற்பாடுகள் காரணமாக வீட்டுத்திட்டத்திற்கான பணங்கள் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி வரும் காலங்களில் இதற்கான பணங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளது என பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *