முல்லைத்தீவு – செல்வபுரத்தில் பற்றி எரிந்த பனங்கூடல்கள்!

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் இன்று மக்கள் குடியிருப்புக்கு அண்மையில் பனங்கூடலில் தீ பரவியதில் அதிகளவான பனைமரங்கள் எரிந்துள்ளதுடன், மக்கள் உபகரண பொருட்கள் சிலவும் எரிந்து சேதமடைந்துள்ளன.

செல்வபுரம் மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள பனங்கூடலுக்குள் திடீரென பற்றிய தீ பனங்கூடல் முழுதும் பரவியுள்ளது.

இந்நிலையில் இந்த தீவிபத்து தொடர்பில் பொலிஸார் மற்றும் படையினருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக பனைமரக்கூடல்கள் அடிக்கடி தீபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *