யாழ் நூலகத்தின் நினைவு அடிக்கல் நீக்கம்!

யாழ் நூலகத்தின் நினைவு அடிக்கல் இன்று நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004இல் யாழ் நூலகம் புனரமைத்து மீளத் திறக்கப்படவிருந்த சமயத்தில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்து, நூலகம்சந்தடியின்றி திறக்கப்பட்டிருந்தது. எனினும் முன்னர் திட்டமிட்டபடி திறக்கப்படவிருந்த நிகழ்ச்சி ஒழுங்கின்படி நூலக நினைவு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள யாழ் மாநகரசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்று அடிக்கல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *