யாழில் முதன்முறையாக வெளியாகிறது இயற்கை வழி செய்திமடல்!

உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நாளை புதன்கிழமை பிற்பகல்-03 மணி முதல் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்றுகூடலில் இயற்கைவழி இயக்கத்தின் செய்திமடல் அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.

இயற்கைவழி வேளாண்மை, உணவு, மருத்துவம் முதற்கொண்டு இயற்கைவழி வாழ்வியலின் சகல கூறுகளையும் பற்றிய அறிவினை எம் இளையோரிடையே கட்டியெழுப்புவதும் அதன் மூலம் இயற்கைவழி இயக்கத்தின் செயற்பாடுகளில் அவர்களைப் பங்காளர்களாகுவதும் மேற்படி செய்திமடலின் பிரதான நோக்கங்களாகும்.

இதன்போது அரங்க செயற்பாட்டுக் குழுவினரின் ஆற்றுகை நிகழ்வும் இடம்பெறும்.

இயற்கைவழி வாழ்வியலில் ஆர்வமுடைய அனைவரையும் இச் சந்தர்ப்பத்தில் ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *