இன்றைய ஆட்டம் தோற்றவர்களின் ஆட்டம்: வெற்றி பெறுவது யார்?

கோலாகலமாக லண்டனில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஆப்கானிஸ்தானும், இலங்கை அணியும் மோதவிருக்கின்றன.

இரண்டு அணையுமே தாங்கள் எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே அபார தோல்வியை சந்தித்தன. அதுவும் ஒரே நாளில். கடந்த சனிக்கிழமை நியூஸிலாந்துடன் இலங்கை அணியும், ஆஸ்திரேலியாவுடன் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் 38 ஓவரிலேயே மொத்த விக்கெட்டையும் இழந்து 207 எடுத்தது. எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் நிலைமையாவது தேவலாம்.

இலங்கை அணி 29 ஓவரில் 136 ரன்னுக்கே மொத்த விக்கெட்டையும் இழந்தது. அவர்களை எதிர்த்து விளையாடிய நியூஸிலாந்து அசால்ட்டாக விளையாடி வெறும் 16 ஓவரில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 137 எடுத்து இலங்கை அணி மூக்கை பதம் பார்த்தனர்.

இன்று முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய இரு அணிகளும் விளையாடுவதால் இதில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *