வாய் கொழுப்பால் சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்! இது தேவையா?

தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மீனாட்சி கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை ரக்ஷிதா.  மேலும் இவர் ‘உப்புகருவாடு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். 

சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களும் பரீட்சயமானவர் நடிகை ரக்ஷிதாவுக்கு சினிமாவில் இந்த நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். இருந்தாலும் எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன் என்று விருது மேடையில் கொஞ்சம் திமிராகவே பேசி இருந்தார் ரக்ஷிதா.

அது அவரின் நேரமோ என்னவோ.. அவர் அப்படி பேசியதிலிருந்து ஒரு தொடரில் கூட இவரை பார்க்கமுடியவில்லை. இதனாலே பலர் இவரின் அந்த திமிரான பேச்சு தான் சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று என பேசத்தொடங்கினார் .  இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சீரியலில் நீண்டநாட்களுக்கு ரக்ஷிதா நடிக்கவிருக்கிறாராம். அதில் அவரது கணவரும் உடன் நடிக்கவிருக்கிறாராம். எனவே கூடிய விரைவில் புதிய தொடரில் என்ன காணலாம் என ரக்ஷிதா கூறியுள்ளார். எது எப்படியோ…இனிமேலாவது வாயை குறைத்தால் சரி.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *