பதவி விலகியதான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை! – ஹிஸ்புல்லா

தான் பதவியை துறந்துவிட்டதாக பரவும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பதவியை துறந்துள்ளதாகவும், இது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அக்கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.

இதேவேளை, ஹிஸ்புல்லாஹ் பதவி விலகியதாக சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரவியிருந்தன. இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர்,

நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக பரவும் செய்தியில் உண்மையில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி என்னிடம் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பினால் ராஜினாமா செய்யலாம் என்று கூறினார்.

இதேவேளை, முஸ்லிம் சமூக தலைவர்கள் உள்ளிட்ட தரப்புகளிடன் ஆலோசனை பெற்ற பின்னர் இது தொடர்பில் தீர்மானிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவொருபுறமிருக்க, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னங்கோன் தனது பேஸ்புக் பக்கத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலகியுள்ளதாக பதிவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில் அரசாங்கத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பதவி விலகுவது தொடர்பில் மறைமுகமாக ஜனாதிபதி மைத்திரி ஹிஸ்புல்லாஹ்விடம் நீங்களே முடிவு செய்யுங்கள் என்று குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தான் முஸ்லிம் சமூக தலைவர்கள் ஜம்மிஆ உள்ளிட்ட தரப்புகளிடன் ஆலோசனை பெற்ற பின்னர் இது தொடர்பில் தீர்மானிப்பேன் எடுப்பேன் என்று ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருப்பதும், அவரின் உறுதியான முடிவு நாளை வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

எவ்வாறாயினும், முன்னைய காலங்களிலும் பதவி விலகுபவர்கள் வெளியான தகவல்களை அடுத்து தாங்கள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்து பேசிவிட்டு முடிவெடுப்போம் என்று குறிப்பிட்டுவிட்டு காலையில் பதவி விலகிய செய்திகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *