மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம்..!

யாழ்.பல்கலைக்கழகத்தின் சகல கல்வி நடவடிக்கைகள் மற்றும் புகுமுக மாணவர்கள் பதிவு ஆகியன மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறவித்துள்ள பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன், கற்றல் நடவடிக்கைகள் மற்றும் புகுமுக மாணவர்கள் பதிவு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி வெகுசன ஊடகங்கள் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி சார் நடவடிக்கைகள் மற்றும் புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை என்பன மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக அறிவிக்கப்படும்.

எனவே மாணவர்கள் அனைவரும் உரிய அறிவித்தலின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *