தயவு செய்து தலைப்பு எழுதாதீர்கள் : சுமந்திரன் வேண்டுகோள்

வடக்கிலிருந்து கடைசி இராணுவ வீரனும் வெளியேற வேண்டுமென நாங்கள் ஒருபோதும் கேட்டதில்லை. தேவைக்கதிகமாக உள்ள இராணுவத்தினரையே வெளியேறுமாறு கேட்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய சுமந்திரனிடம், வடக்கில் இராணுவத்தை வௌியேற வேண்டுமென நாங்கள் கோரவில்லையென மாவை சேனாதிராசா தெரிவித்ததாக வெளியான செய்தியை பற்றி கேள்வியெழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு இராணுவ வீரனும் வடக்கிலே இருக்கக்கூடாதென நாங்கள் எந்தக்காலத்திலும் சொன்னதும் கிடையாது. நாங்கள் சொன்னதெல்லாம் தேவைக்கதிகமாக வடக்கிலே இராணுவத்தை குவித்து வைத்திருக்கிறீர்கள் என்பதே.

தேவைக்கதிகமாக வடக்கிலே இராணுவத்தை குவித்து வைத்து, மக்களின் காணிகளை பறித்து வைத்திருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.

நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதை நாளைக்கு பத்திரிகைகள், மாவை சேனாதிராசா வடக்கில் இராணுவம் இருக்க வேண்டுமென கூறினார், அதற்கு மாறாக சுமந்திரன், இராணுவம் இருக்க வேண்டுமென கூறினார் என எழுத வேண்டாம். இருவரும் சொன்னதை புரிந்து கொண்டு எழுதுங்கள். புத்திசாலித்தனமாக நாங்கள் இருவரும் சொன்னதில் எந்த முரண்பாடும் இல்லையென்பதை தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.

வடக்கிலே தேவைக்கதிகமாக இராணுவம் இருக்கக்கூடாதென்பதே இன்றைக்கும் எங்கள் நிலைப்பாடு. நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.

பத்திரிகைகள், இணையத்தளங்களில் தலைப்பு செய்தி போடுபவர்களிற்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். நீங்கள் தலைப்பு செய்தி எழுதாமலே தயவுசெய்து நான் சொன்னதை தயவுசெய்து பிரசுரியுங்கள்.

சுமந்திரன் சொன்னவை என தலைப்பு போடுங்கள். தயவுசெய்து உங்களிற்கு பிடித்ததை தலைப்பாக்க வேண்டாம். தலைப்பை நீங்கள் விரும்பியதை போல போடுவதால் பல பிரச்சனைகள் வரும். இந்த துயரமான சம்பவத்திலும் அப்படியாக தயவுசெய்து செயற்பட வேண்டாம். தலைப்பை எழுத வேண்டாம் என்று கேட்டுகோள் விடுத்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *