யாழில் இன்று காலை கைது செய்யப்பட்டவர் ஆவாக்குழுவின் உறுப்பினர்

யாழ். கொக்குவில் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவினைச் சேர்ந்த அசோக் என்றழைக்கப்படும் குறித்த இளைஞன், அவரது வீட்டில் பாரிய ஆயுதமொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரென்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் இதற்கு முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். அத்தோடு இன்று அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே சுற்றிவளைப்பின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *