வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்களை கைது செய்ய இலங்கையில் சட்டமில்லை!

IS பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாடு திரும்பியது குறித்து அரசாங்கம் அறிந்திருந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் இணைந்த நபர்களை கைது செய்ய போதுமான சட்டம் இலங்கையில் இல்லை.

இவர்கள் சிரியாவுக்கு சென்றமை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் இணைந்தமை குறித்து அறிந்திருந்தோம்.

எனினும் வெளிநாடு ஒன்றுக்கு செல்வது மற்றும் வெளிநாட்டு ஆயுத அமைப்புடன் இணைவது இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய குற்றமல்ல.

இஸ்லாமிய அரசு அமைப்பு இலங்கையின் சட்டத்திற்கு அமைய பயங்கரவாத அமைப்பு. எனினும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நாட்டில் சட்டம் இல்லை.

இலங்கையில் செயற்படும் பயங்கரவாத குழுக்களை மாத்திரம் கைது செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பயங்கரவாத சந்தேக நபர்களை சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என பிரபல சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடக்கும் சந்தேக நபர்களை கைது சய்ய விசேட சட்டம் எதுவும் தேவையில்லை.

அத்துடன் பயங்கரவாதத்தை அடக்க அவசரகாலச் சட்டம் அவசியமில்லை எனவும் கோமின் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *