யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! முகநூலூடாக விடுக்கபட்டுள்ள சவால்?

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி வகைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முகநூலூடாக இரத்ததான சவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தன்னார்வமாக வருகைதந்து இரத்ததானம் செய்து சவாலை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(A-), (O-) குருதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *